Breaking
Mon. Dec 23rd, 2024

 

மக்­களின் நம்­பிக்­கையை இழந்த கூட்­ட­ணி­யினர் மக்கள் நம்­பிக்­கையை வென்ற எம்­மீது நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரு­வது வேடிக்­கை­யா­னது என்று ஊட­கத்­துறை அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்க தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தை கலைத்து பொதுத் தேர்­தலை நடத்தும் பட்­சத்தில் மக்­க­ளுக்கு யார் மீது நம்­பிக்கை உள்­ளது. யார் மீது நம்­பிக்கை இல்லை என்­ப­தனை புரிந்­து­கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்­பிட் டார்.

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­ டுள்ள நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

ஊட­கத்­துறை அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்க இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்,

கடந்த ஜன­வரி மாதம் எட்டாம் திகதி நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் முன் னாள் ஜனா­தி­பதி தலை­மை­யி­லான கூட்­ட­ணி­யினர் மக்­களின் நம்­பிக்­கையை இழந்­த னர். அவர்கள் மக்­க­ளினால் தோற்­க­டிக்­கப்­பட்டு நிரா­க­ரிக்­கப்­பட்­டனர்.

இந்­நி­லையில் மக்­க­ளினால் நம்­பிக்கை வைக்­கப்­பட்டு புதிய அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றது. மக்­களின் நம்­பிக்­கையை இழந்த கூட்­ட­ணி­யினர் மக்கள் நம்­பிக்­கை யை வென்ற எம்­மீது நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரு­வது வேடிக்­கை­யா­னது. மேலும் பிர­தமர் மீதான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­துக்கு உட்­ப­டுத்­தி­னாலும் நாம் அதற்கு முகம்­கொ­டுக்க தயா­ராக இருக்­கின்றோம். எனவே அது குறித்து நாம் பய ப்­ப­ட­வில்லை.

அத்­துடன் உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தை கலைத்து தேர்­த­லுக்கு செல்­லு­மாறு நாமும் கூறு­கின்றோம். அவ்­வாறு பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு செல்லும் பட்­சத்தில் மக்­க­ளுக்கு யார் மீது நம்­பிக்கை உள்­ளது யார் மீது நம்­பிக்கை இல்லை என்­ப­தனை புரிந்­து­கொள்ள முடியும். மக்கள் தேர்­தலில் யாரை தெரிவு செய்து யாரை நிரா­க­ரிக்­கின்­றனர் என்­ப­தனை அறிந்­து­கொள்ள முடியும்.

நாங்கள் மக்­களின் நம்­பிக்­கையை பெற்­றுள்ளோம். முன்னாள் ஆட்சியாளர்கள் மக்கள் மீதான நம்பிக்கையை இழந்து ள்ளனர். பாராளுமன்றத் தேர்தலில் தமது வாக்குகளின் ஊடாக மிகப்பெரிய நம் பிக்கையில்லா பிரேரணையை மக்கள் முன்வைப்பார்கள் என்றார்.

Related Post