Breaking
Fri. Jan 10th, 2025

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பால நிர்மாண நடவடிக்கைக்காக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களின் தலைமையில்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் அடிக்கல் நடும் வைபவம் இன்று (14) இடம் பெற்றது

750 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இக் கடல் மேல் பாலமானது வீதி அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலைகள் பெற்றோலிய வள அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளது

நான்கு வருட காலமாக  ஏமாற்றப்பட்டு வந்த குறித்த பால நிர்மாண நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் நன்றிகளை தெரிவிக்கின்றனர்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பால நிர்மாணத்தை உடனடியாக தான் ஜனாதிபதியானதும் பூர்த்தி செய்து தருவதாக கூறியிருந்த போதிலும் பிரதமரால் மக்களின் கனவு தற்போது நிறைவேறியுள்ளது.

இப் பால நிர்மாண நடவடிக்கையால் போக்குவரத்து உள்ளிட்ட பல சாதகமான விடயங்களும் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான  எம்.எஸ்.தௌபீக், இம்ரான் மஹ்ரூப் உட்பட உள்ளூராட்சிமன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பல  முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.

Related Post