Breaking
Thu. Dec 26th, 2024

சர்வதேச அளவில் நிலவி வரும் அசாதரண சூழ்நிலைகளின் காரணமாக நாட்டு மக்கள் பாதுகாப்பிற்காக செலவிடப்படும் பட்ஜெட்டை உயர்த்த உள்ளதாக ஜேர்மனி அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த நிதி அமைச்சர் Wolfgang Schaeuble, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச அளவில் உறுதியற்ற நிலை நிலவி வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனை எதிர்க்கொள்ளும் வகையில் நாட்டின் பாதுகாப்பிற்கு செலவிடப்படும் சராசரி தொகையை இன்னும் சில ஆண்டுகளில் உயர்த்த முடிவு செய்துள்ளோம்.

இருப்பினும், எந்த ஆண்டிலிருந்து, எவ்வளவு தொகையை உயர்த்த அரசு முடிவு எடுத்துள்ளது என்ற தகவலை அவர் தெரிவிக்கவில்லை.

பாதுகாப்பு குறித்து ஏற்பாடுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த முடியாது என்பதால், அந்த துறைக்குரிய செலவினங்களையும் உடனடியாக உயர்த்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசு பட்ஜெட்டில் எந்த அமைச்சகத்திற்கு அதிக அளவிலான நிதியை ஒதுக்கப்படும் என்ற கேள்விக்கு, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தேவையான அனைத்து செலவினங்களையும் சராசரியாக உயர்த்த அரசிற்கு பரிந்துரை செய்துள்ளோம்.

தற்போதைய உலகில் பாதுகாப்பின்மை அதிக அளவில் நிலவி வருவதால், அந்த துறைக்குரிய செலவினங்களை உயர்த்த வேண்டியது அவசியமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Post