அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் தொடர்பாகவும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலனோம்புகை நடவடிக்கைகள் குறித்தும் கண்டறிவதற்கு வாரத்தில் ஒரு முறையேனும் அப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த மாவட்டங்களிலுள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
நேற்று (01) முற்பகல் கேகாலை நகர மண்டபத்தில் நடைபெற்ற கேகாலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.