Breaking
Sun. Mar 16th, 2025
மக்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்து கொண்ட அவற்றுக்கு தீர்வு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் வார நாட்களில் மக்கள் தங்களது பிரச்சினைகளை கூறி தீர்வு பெற்றுக்கொள்ள சந்தாப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் வார நாட்களில் சிறிகொத்தவிற்கு சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொள்வார்கள்.

நேற்று அமைச்சர் கபீர் ஹாசிம் மற்றும் இரான் விக்ரமரட்ன ஆகிய அமைச்சர்கள் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டிருக்கையில் திடீரென பிரதமர் அந்த இடத்திற்கு சென்று மக்களின் பிரச்சினைகளை தாமே நேரில் கேட்டறிந்து கொண்டார்.

சுமார் ஐந்து மணித்தியாலங்கள் சிறிகொத்தவில் இருந்து மக்களின் பிரச்சினைகளை செவிமடுத்து அவற்றுக்கு தீர்வு வழங்குமாறு பணிப்புரை விடுத்த பிரதமர், மக்களுடன் மதிய போசனத்தையும் உண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறியுள்ளார்.

By

Related Post