திருகோணமலை – குச்சவெளி, இக்பால் நகருக்கு துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.இதன்போது கிராம சேவகர் கட்டடத்தில் மக்களுடனான சந்திப்பினை ஏற்பாடு செய்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
குறித்த நபர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், அந்த திட்டத்துக்கான தகுந்த ஆவணங்களை ஒப்படைக்குமாறும் இதன் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து நிலாவெளி கோபாலபுரம் பள்ளியில் அமைச்சர் தலைமையில் விசேட சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது.
கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், எதிர்கால திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பிலும் பிரதியமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
அத்துடன் இலங்கை திருகோணமலை துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.அங்கே உத்தியோகத்தர்களின் கடமைகளை கேட்டறிந்ததோடு, கடமை புரியும்நிர்வாகத்தினரை சந்தித்து எதிர்கால அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடலிலும்ஈடுபட்டுள்ளார்.