Breaking
Mon. Dec 23rd, 2024

புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பது தொடர்பில், பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட யோசனைகள் அடங்கிய அறிக்கை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், நாளை செவ்வாய்க்கிழமை கையளிக்கப்படவுள்ளதாக, அவ்வறிக்கையைத் தயாரித்த குழு அறிவித்துள்ளது.

புதிய அரசியலமைப்புக்கான பொதுமக்களின் யோசனைகளைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழு, கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல், பொதுமக்கள், சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றிடமிருந்து யோசனைகளையும் பரிந்துரைகளையும் சேகரித்து வந்தது.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்ட அறிக்கையே, நாளைய தினத்தில், பிரதமரிடம் கையளிக்கவுள்ளதாக அக்குழு தெரிவித்தது.

By

Related Post