-முர்ஷிட்-
கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக, நிந்தவூரில் தேவையுடைய மக்களின் வாழ்வாதார அபிவிருத்திகளுக்கென தனது அதிகாரத்திற்குட்பட்ட அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார்.
இலங்கை புடவை மற்றும் ஆடை நிறுவனத்தின் நிந்தவூர் தையல் பயிற்சி நிலையத்திற்கான விஜயம் ஒன்றை (05) மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, இலங்கை புடவை மற்றும் ஆடை நிறுவனத்தின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் ஜூனைடீன் மான்குட்டி, பிரதேச இணைப்பாளர் பஸ்மீர் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.
குறித்த தையல் பயிற்சி நிலையத்தை மையப்படுத்தியதான குறைபாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.