அம்பாறை மாவட்ட மக்களின் அரசியல் பிரதி நிதித்துவம் அநாதையாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது தனிச்சின்னத்தில் இங்கு களம் இறங்கி இருப்பதாக அ.இ.மு.கா.தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் மருதமுனையில் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் தொழிலதிபர் சித்தீக் நதீரின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று இங்கு வந்து புலம்புவதாக அறிகின்றேன்.ஏன் இந்த புலம்பல் என்று தேடிப்பார்க்கின்ற போது,எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சியினை கண்டு என்று கண்டு கொண்டேன்.மக்களுக்காகவே கட்சியே தவிர கட்சிக்காக மக்கள் அல்ல,கட்சி என்பது மதமுமல்ல என்ற நிலையினை நாம் உருவாக்கிவருகின்றோம்.
இன்றைய தேர்தல் களத்தில் எமது அணியில் போட்டியிடுகின்றவர்கள் மதிப்பும்,மறியாதையும மக்கள் மத்தியில் கொண்டவர்கள்,மறைந்த மாமனிதர் அஷரப் அவர்கள் கண்ட கிழக்கின் உதயம் இன்று கனவாகவே இருக்கின்றது,இன்ஷா அல்லாஹ் அதனை எமது கட்சி இந்த மண்ணில் அந்த கனவை நினைவாக மாற்றித்தருவோம் என்றும் அமைச்சரும்,தலைவருமான றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.
கிழக்கிலிருந்து முஸ்லிம்களுக்கு அரசியல் வழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அந்த விழிப்புணர்வினை கொண்டுவந்தவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள்,ஆனால் துரதிஷ்டம் இந்த மண் இன்று தற்போதைய அரசியல் தலைமைியலான புறக்கணிக்கப்பட்டுள்ளது,
பாராளுமன்ற பிரதி நிதித்துவம் என்பது மக்களுக்காகவே இருக்க வேண்டும்.அது ஒரு சமூக பணி இந்தப் பணியினை பொழுது போக்குக்காக எவரும் செய்ய முடியாது.அது கடமையாகும். என்பதை நாம் உணர்ந்து கொண்டதன் பலனாகவே இந்த பணியினை அல்லாஹ்வின் திருப்பொறுத்தம் நோக்கி முன்னெடுத்துவருகின்றோம்.என்றும் அமைச்சர் இதன் போது கூறினார்.