யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கான நிதி எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வரவு செலவுத்திட்டத்தில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மக்களுக்கு நெருக்கமான சிறந்த வரவு செலவுத்திட்டமொன்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் குறிப்பிட்டார்.