Breaking
Mon. Dec 23rd, 2024
அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை இன்றுடன் (29) நிறைவு செய்யப்படவுள்ளது. மாவட்ட ரீதியில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை கடந்த முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாக அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்துள்ள்ளார்.
அதற்கமைய இன்றைய தினம் அம்பாறை மற்றும் இரத்தினப்புரி மாவட்டங்களில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. எனினும் எதிர்வரும் மார்ச் 03 ஆம் திகதி தொடக்கம் 05 ஆம் திகதி வரை கொழும்பில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
011 243 7676 என்ற தொலைப்பேசி இலக்கத்தினூடாகவோ அல்லது 011 232 8780 என்ற தொலைநகல் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்க முடியும்.

By

Related Post