அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக ஐ.எல்.எம்.ரபீக் நியமிக்கப்பட்டு, அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி, உறுப்பினர் பதவிக்காக, வழங்கிய வாக்குறுதியை சரியாக நிறைவேற்றி, விட்டுக்கொடுப்பு செய்த மின்ஹாஜ் வட்டார உறுப்பினர் சிராஜ் அவர்களுக்கும், முன்னாள் தவிசாளர் அன்ஸில் அவர்களுக்கும் பிரதேச மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.