அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஏறாவூர் மத்தியகுழு புனரமைப்புக் கூட்டம் இன்றைய தினம் (03) முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் M.S.சுபைர் தலைமையில் ஏறாவூரில் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில், கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் தவிசாளர் அமீர் அலி, பிரதி செயலாளர் நாயகம் M.A.அன்சில், பிரதி தேசிய அமைப்பாளர் M.A.M.தாஹிர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.