Breaking
Wed. Nov 27th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் களுத்துறை கிளையின் மத்திய குழுக் கூட்டம், களுத்துறை நகரசபை உறுப்பினரும், அமைப்பாளருமான ஹிஷாம் ஸுஹைல் தலைமையில் (23) நடைபெற்றது.

இதன்போது, கட்சியினால் ஒதுக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள் மற்றும் பொதுவசதிகள், சுயதொழில் என்பவற்றிற்கான நிதி பயன்படுத்தப்பட வேண்டிய செயற்கிரமம் விரிவாக ஆராயப்பட்டு, பொறுப்புக்கள் உறுப்பினர்களுக்கு அமைப்பாளரால் பகிர்ந்தளிக்கப்பட்டன. அத்துடன், பொதுமக்கள் பாவனைக்காக மேலும் 06 குளாய்நீர்க் கிணறுகள் அமைப்பதற்கான் இடங்களும் அடையாளப்படுத்தப்பட்டன.

இங்கு உரையாற்றிய உறுப்பினர் ஹிஷாம் கூறியதாவது,

சாதாரண மக்களுக்கு சாக்கடையாகவும் திட்டுப்பட்டதாகவும் தனவந்தர்களுக்கும் மேட்டுக்குடியினருக்கும் பரம்பரைச் சொத்தாகவுமாகிப்போயிருந்த அரசியலை சமூகப்பணியாக மாற்றி சமூகத்தின் தரத்தை உயர்த்தி இந்தநாட்டின் ஏனைய சமூகங்களைப்போல் சவால்களுக்கு முகம்கொடுக்கும் சமூகமாக மாற்றும் இலட்சியத்தோடு சென்ற தேர்தலில் Hisham suhail எனும் ஓர் இளைஞனான என்னால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனும் சமூக அரசியல் பேரியக்கம் இவ்வூரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்…. பலத்த சவால்களுக்கும் களுத்தறுப்புகளுக்கும் இடையே சந்தித்த கன்னித்தேர்தலிலேயே ஓர் உறுப்பினரை உங்கள் பொன்னான வாக்குகள் எமக்கு பெற்றுந் தந்ததை நன்றியுடன் ஞாபம் செய்கின்றோம்.

பெறுமதிமிக்க இச்சமூகத்திற்கான எம் பணியைத் தொடர்வதற்காகவும் உங்கள் தேவைகளை விரைவாக இனம்கண்டு பூர்த்தி செய்வதற்குமாக அகில இலங்க மக்கள் காங்கிரஸின் செயற்குழு கட்சித்தலைமையின் வழிகாட்டலோடு இன்றைய தினம் நியமிக்கப்படவுள்ளத்தை  மிகவும் நன்றியுடனும் சேவையுணர்வுடனும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

எவ்விதமான அதிருப்தியோ மனச்சங்கடங்களோ எம் கட்சிப்பணியாளர்களால் பொது மக்களுக்கு ஏற்படாதிருக்கும் பொறுப்பை கட்சி முழுமையாக ஏற்கிறது. இதுவே தேசிய மற்றும் மாவட்ட தலைமைகளின் வழிகாட்டலாகும்.

எனவே, சமூக மேம்பாட்டுக்காக தொடர்ந்தும் எம்மோடு இணைந்து பணியாற்ற அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.

இதனைத் தொடர்ந்து கட்சியின் மத்திய குழு அமைப்பது பற்றிய தெளிவு வழங்கப்பட்டு, தெரிவும் இடம்பெற்றது.

(ன)

Related Post