Breaking
Mon. Dec 23rd, 2024

மேல்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல். பரீட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சுகாதார சேவைகளுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதத்தை கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று மாலை (24.10.2017) கையளித்தார்.

முன்னாள் நிதி அமைச்சராகவும், பிரதி நீதி அமைச்சராகவும், நீண்டகால நிந்தவூர் பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய மர்ஹூம் எம். எம். முஸ்தபாவின் மருமகனான வைத்திய கலாநிதி பரீட் அரசியலில் நீண்டகால பாரம்பரியம் கொண்டவர். மர்ஹூம் எம்.எச்எம். அஷ்ரப் முஸ்லிம் காங்கிரசை ஆரம்பித்த போது, அக்கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்.

டாக்டர் பரீட், தனது வைத்திய சேவைக் காலத்தில் கம்பஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராகவும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளராகவும், யானைக் கால் நோய்த் தடுப்பு நிலையத்தின் பணிப்பாளராகவும், மாளிகாவத்தை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியாகவும், நிந்தவூர், சாய்ந்தமருது ஆகிய வைத்திய சாலைகளின் மாவட்ட வைத்திய அதிகாரியாகவும் முன்னர் பணியாற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றவர்.

சாய்ந்தமருதைப் பிறப்பிடமாக கொண்ட டாக்டர் பரீட,; பல்வேறு சமூக நல இயக்கங்களில் இணைந்து மக்கள் பணியாற்றி வருகின்றார்.

(ஊடகப்பிரிவு)

Related Post