Breaking
Mon. Dec 23rd, 2024

-முர்ஷிட் முஹம்மத்-

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் ஆதரவாளர்களுக்கான இரண்டாம் கட்ட ஒன்றுகூடல், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய சுகாதாரத்துறைப் பொறுப்பாளரும், நிந்தவூர் பிரதேச அமைப்பாளருமான டாக்டர். பரீட் தலைமையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் மக்கள் பணிமனையான, முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எம்.முஸ்தபாவின் இல்லத்தில் நேற்று மாலை (19)  நடைபெற்றது.

இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், கனிமவள கூட்டுத்தாபனத்தின் தலைவருமான எஸ்.எஸ்.பி மஜீத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதோடு,   ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் நிந்தவூர், வன்னியார் நகர வேட்பாளரும், பொறியியலாளருமான வாக்கீர் ஹூசைன்  உட்பட பெருந்திரளான ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

அத்தோடு கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட வேறு கட்சிகளுடன் இணைந்து செயற்பட்ட  அரசியல் செயற்பாட்டாளர்கள் பலர்,  எதிர்வரும் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடாக ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன்  இணைந்து  செயற்படும் நோக்கில் பிரசன்னமாகியிருந்தனர்.

இவ் ஒன்றுகூடலில் சமகால அரசியல் நிலவரங்கள், கூட்டமைப்பு ஊடாக நிந்தவூர் பிரதேச சபையை வெற்றி கொள்ளும் உபாயங்கள்  மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டதுடன், கூட்டமைப்பு கட்சிகளுடன் சேர்ந்து  தேர்தல்   பணிகளில் ஈடுபடுவதற்கான தேர்தல் செயற்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

 

 

 

 

Related Post