Breaking
Sun. Dec 22nd, 2024

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முஸ்லிம் சமூகத்தின் இன்றைய குரலுமான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் இயங்கும் “அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்” எதிர்வரும் 2018 ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் தனது மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிட களமிறங்கியுள்ளதை யாவரும் அறிவர்.

இந்நிலையில் கண்டி மாவட்டத்தின் மடவளை மடிகே, குன்னேபான மடிகே, பிஹில்ல தெனிய ஆகிய பகுதிகளில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரான அரசியல் அனுபவசாலியும், சமூக சேவகருமான மதிப்பிற்குறிய அக்பர் அப்துல் மஜீதின்  இல்லத்தில், மக்கள் காங்கிரஸின் தலைமை காரியாலயம் நேற்று மாலை (30) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் விஷேட பேச்சாளராகவும், பிரதம அதிதியாகவும் வடமாகாணசபை உறுப்பினரும் அமைச்சறின் இணைப்புச் செயலாளருமான அலிகான் ஷரீப், கண்டி மாவட்டத்தின் பிரதான இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன் மற்றும் முன்னாள் அமைச்சர் மர்ஹும் காதர் ஹாஜியாரின் மருமகனும், மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளருமான ஹம்ஜாத் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

“மாறாத மலையக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவது கொண்டு சமுதாயத்தின் பலத்தை அரசுக்கு உணர்த்த வேண்டும்” எனும் பிரதான தொனிப் பொருளில் அவ்வுரைகள் நிகழ்த்தப்பட்டன.

கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பலர் இக்கூட்டத்தில் கலந்து சிறப்பித்தனர். இன்ஷா அல்லாஹ் மேலதிக வாக்குகளால் மயில் சின்னம் மடவளையில் முதலிடத்தை பெறும் என்பதற்கு மக்கள் ஆதரவு ஆதாரமாக இருந்தது.

 

 

 

 

 

 

Related Post