Breaking
Fri. Mar 14th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகாரபீடக் கூட்டம், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் தலைமையி்ல், கடந்த 15ஆம் திகதி அன்று, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், கட்சியின் கொழும்பு மாவட்ட முன்னாள் அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான மர்ஹூம் பாயிஸ் அவர்களின் மருமகன் பஹத் கட்சியின் உயர்பீட உறுப்பினராக (High Command Member) நியமிக்கப்பட்டார்.

அதன்பிற்பாடு, நேற்றைய தினம் (04) கட்சித் தலைமையகத்தில், தலைவர் ரிஷாட் பதியுதீனை அவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, அவர் கொழும்பு மாவட்டத்தில் மர்ஹூம் பாயிஸ் அவர்கள் முன்னெடுத்துச் சென்ற கட்சி மற்றும் சமூகப் பணிகளை தாம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும், கட்சியின் வளர்ச்சிக்கு தமது முழுமையான பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் தலைவரிடம் உறுதியளித்தார்.

Related Post