Breaking
Mon. Dec 23rd, 2024

 

-முர்ஷித் வாழைச்சேனை-

நடைபெறவுள்ள ஊள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் அரசியல் ரீதியான பாரிய மாற்றத்தினை கொண்டுவரவுள்ளதாக மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்த பின்னர் (21) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகின்ற அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகரசபையில் தனித்து போட்டியிடுவதுடன், ஏனைய உள்ளுராட்சி மன்ற பிரதேசங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தும் போட்டியிடுகின்றது. அதனடிப்படையில் எங்கள் கட்சி தனியாகவும், இணைந்தும் போட்டியிடும் பிரதேசங்களில் பாரிய மாற்றத்தினை அரசியல் ரீதியாக கொண்டு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் போட்டியிடும் அனைத்து உள்ளூராட்சி மன்ற பிரதேசங்களிலும், சகல இனத்தவரையும் சேர்த்தே போட்டியிடுகிறோம். எங்கள் கட்சி மக்களுக்காக பேசுகின்ற கட்சி. மக்கள் மீது நம்பிக்கை கொண்ட கட்சி என்ற அடிப்படையில், மக்கள் எங்களை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

 

 

 

Related Post