அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளரும் பிரபல தொழிலதிபருமான ஏ.எஸ்.ஏ.பாஸித்தின் பெரும் முயற்சியினால், அக்கரைப்பற்றிலுள்ள 20 விளையாட்டுக் கழகங்களுக்கு சுமார் பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலமே இவ்விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
அக்ரைப்பற்று பிரதேசத்தின் வரலாற்றில் ஒரே தடவையில் ஆகக்கூடுதலான நிதியை விளையாட்டுக் கழகங்களுக்கு ஒதுக்கீடு செய்து தந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும், அதற்காக முன்னின்று உழைத்த அமைப்பாளர் ஏ.எஸ்.ஏ.பாஸித்திற்கும் கழகங்களின் பொறுப்பாளர்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் முதலாம் கட்ட நிகழ்வு நேற்று (08) அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இங்கு ஸ்பார்ட்டன் கடின பந்து கிரிக்கெட் கழகத்திற்கும், அம்பாரை வெட்டரன்ஸ் உதைபந்தாட்டக் கழகத்திற்குமான விளையாட்டு உபகரணங்கள் அமைப்பாளர் ஏ.எஸ்.ஏ.பாஸித்தினால் வழங்கி வைக்கப்பட்டது.