Breaking
Mon. Dec 23rd, 2024
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இன்று மாலை (31) பேருவளை, தர்காடவுன் பிரதேசத்துக்கு விஜயம் செய்து, கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள், முக்கியஸ்தர்கள், பிரதேசவாசிகள் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார்.
 
 
பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹசீப் மரிக்காரின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பில், முன்னாள் அமைச்சரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்னவும் பங்கேற்று, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுடன் உரையாடியதுடன், அங்கு வருகை தந்திருந்த மக்களுடனும் அளவளாவினர்.
 
 
இந்த சந்திப்பின் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் பேருவளை தொகுதி அமைப்பாளர் இப்திகார் ஜெமீல், மக்கள் காங்கிரஸின் கொள்கைபரப்புச் செயலாளர் ஜவாத் மற்றும் வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் ஆகியோரும் உடனிருந்தனர்.
 
 
சுமார், ஆறு மாத காலமாக சிறையிலிருந்து விடுதலையான பின்னர், தமது பிரதேசத்துக்கு வருகை தந்த தலைவர் ரிஷாட் பதியுதீனை, கட்சித் தொண்டர்களும், ஆதரவாளர்களும், அபிமானிகளும் அன்புடன் வரவேற்று சுகம் விசாரித்தனர். அத்துடன், தலைவரின் துரித விடுதலைக்காக தாம் நோன்பு நோற்று பிரார்த்தித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதேவேளை, தனது விடுதலை வேண்டி பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
 
 
 
 

Related Post