Breaking
Fri. Nov 15th, 2024

எதிர்க்கட்சி அரசியலை முன்னெடுத்து வரும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், எத்தனை வேலைப்பளுகள் இருந்தாலும், மாதத்தில் 02/3 வாரம் மக்கள் சந்திப்புக்களை கட்டாயம் மேற்கொண்டு வருவதை வழக்கமாக்கிக்கொள்வார். 

அமைச்சராக இருந்த காலத்திலும் சரி, இப்போதைய காலத்திலும் சரி, தனது மக்களை தொடர்ந்தும் சந்தித்து வரும் பழக்கத்தை அவர் எப்போதும் கொண்டவராவார். அந்த மக்களின் குறை நிறைகளை நேரில் சந்தித்து, தீர்த்து வைக்கும் பழக்கத்தை மிக சிறப்பாக மேற்கொள்ளும் ஒரு அரசியல்வாதியாவார். 

இரண்டு தடவைகள் அநியாயமாக சிறைப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து, கடந்த ஒரு வருடமாக மக்கள் சந்திப்புக்களை அவர் மேற்கொள்ளவில்லை.

ஆனால், சிறையில் இருந்து வெளியே வந்த அவரை நேரில் சந்திப்பதற்கு, நாடு முழுவதுமுள்ள மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அந்தவகையில், ஒவ்வொரு வாரத்தின் இறுதி நாட்களிலும், மக்களை அவரவர் ஊர்களிலே சென்று சந்திப்பதை, கடந்த 03 மாதங்களாக நடைமுறைப்படுத்தி வருகின்றார்.

அவர் செல்லும் இடமெல்லாம் அவருக்கான அமோக வரவேற்பு காத்துக்கொண்டே இருக்கின்றது. அவரை சந்திக்கும் மக்கள் எவரும், அவரிடமிருந்து எந்தவொரு இலாபங்களையும் எதிர்ப்பார்க்காமல்,  அன்பை மாத்திரமே அள்ளி வழங்குகின்றனர். தொடர்ந்தும் நன்றி விசுவாசத்துடனேயே மக்கள் அவருடன் பயணிக்கின்றனர். தலைமையை நேசிக்கும் உண்மையான மக்களை பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. 

தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு நடந்த அநீதிக்காக குரல் கொடுத்து, நோன்பு நோற்று, பிராத்தனை செய்த மக்கள், அவரை கண்டதும் கண்ணீர் வடிக்கின்றார்கள். அதுவே அவரின்  வெற்றியாகும் . 

கடந்த சில நாட்களாக பல மாகாணங்களுக்கு மேற்கொண்ட விஜயங்கள் அனைத்திலும், அவருக்குப் பின்னால் மக்கள் புடைசூடியது, அவரின் அரசியல் தலைமைத்துவத்தின் மீதான மக்களின் நம்பிக்கையையும், அவரின் அரசியல் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டுகின்றது. 

தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற  இன வேறுபாடுகளுக்கு அப்பால், அவருக்கான விஷேட பிரார்த்தனைகளும், மக்களின் ஆதரவும் தொடர்ந்து கிடைப்பது விஷேட அம்சமாகும்.

 

 

Related Post