Breaking
Mon. Jan 13th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மீதான கெடுபிடிகள் எல்லை தாண்டி செல்கின்றன. தேர்தல் ஆணையகத்தின் பரிந்துரையை குப்பை தொட்டிக்குள் வீசிவிட்டு, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பழி வாங்குவதிலேயே அதிகார வெறியர்கள் கரிசனை காட்டுகின்றார்கள்.

சிறையில் அடைப்பதால் ஏற்படவிருக்கும் லாப நட்ட கணக்கில் தெளிவின்மையால், இன்னும் கைது செய்யாமல் விசாரனை என்ற பெயரில் பாரிய உளவியல் தொல்லைக்குள்ளாக்குகின்றார்கள்.

ரிஷாட் பதியுதீனை கைது செய்வதால், சில ஆயிரம் இனவாத வாக்குகளை அதிகரித்துக்கொள்ளலாம் என நிச்சயமானால், அவரை கைது செய்து சிறையில் அடைப்பார்கள். அல்லது தேர்தலுக்கு ஓரிரு நாட்கள் வரை பொறுத்திருப்பார்கள். ஆக மொத்தத்தில் நீதி, நியாயங்களுக்கு அதிகார வெறியர்களிடம் ஒரு துளியும் மதிப்பில்லை.

‘உலகில் 180 க்கு மேற்பட்ட நாடுகளில், கொரோனாவால் உயிர்நீர்த்த எல்லா மதத்தவரையும் அடக்கம் செய்யும் போது, இலங்கையில் மட்டும் எரிப்பது உச்சகரமான மனித உரிமை மீறல்’ என உலக சுகாதார ஸ்தாபனம் எடுத்துக்கூறியதையும் புறக்கணித்து, முஸ்லிம் ஜனாஸாக்கள் மீதும் பழி தீர்த்த உலகின் மிகக் கொடூரமான அதிகார வெறியர்கள், நாட்டின் ‘தேர்தல் ஆணையகத்தை கணக்கில் எடுக்கமாட்டார்கள்’ என்பதை தேர்தல் ஆணையாளரே கூறிவிட்டார்.

தம்மை எதிர்த்து போட்டியிட்டமைக்காக, ‘உலகின் தலைசிறந்த கொமாண்டர்’ என்று புகழ் பெற்ற சரத் பொன்சேகாவையே, சப்பாத்துக் கால்களால் உதைத்து, அகௌரவப்படுத்தி, இழுத்துச் சென்று, பழிதீர்த்த கொடூரர்கள்களுக்கு ரிஷாட் எம்மாத்திரம்?

தமக்குச் சாதகமாக தீர்ப்பு கூறவில்லை என்பதற்காக, நாட்டின் முதல் பெண் நீதி அரசரையே கேவலமான முறையில் பழிதீர்த்த கொடூரர்களுக்கு ரிஷாட் எம்மாத்திரம்?

நீதி, நியாயமெல்லாம் இத்த அதிகார வெறி பிடித்தோரின் பார்வையில் ஒரு மயிருக்கும் சமனில்லை

நாம் எந்த கட்சியின் ஆதரவாளராகவோ இருக்கலாம். ஆனால், ரிஷாட் பதியுதீன் மீதான அதிகார வெறி பிடித்தோரின் அடாவடிக்கு எதிர்ப்புக் காட்டுவதே, இத்தேர்தலில் எமது பெரும் பணி என்பதை, மனித உரிமையையும் ஜனநாயகத்தையும் நேசிக்கும் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

அடுத்தவன் துயரில் இன்பம் காணும், கேவலமான மனநிலை கொண்ட மிருகக்கட்சி ஒரு ஆசனமுமின்றி தோற்கவேண்டும். தோற்றே தீரும்!

அல்லாஹ் நீதியாளன்! நீதி செலுத்துவதையே விரும்புகின்றான்!

சட்டம் என்பது நீதியல்ல.
நீதி நியாயமானது.

-வஃபா பாறுக்-

Related Post