-முர்ஷித்-
மக்கள் சேவையில் ஈடுபடும் நாம் நமது கடமை, பொறுப்பு என்பனவற்றை உணர்ந்து செயற்பட வேண்டும் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் கூறினார்.
நிந்தவூர் பிரதம தபாலக தபால் அதிபராக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச்செல்லவுள்ள ஏ.எம்.ஏ றசீதுக்கான பிரியாவிடை வைபவமும் புதிய தபாலதிபர் யூ.எல்.எம். பைசரை வரவேற்கும் நிகழ்வும் நிந்தவூர் தபாலக மண்டபத்தில் நடைபெற்றுது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நிந்தவூர் மக்களுக்கு மிக நீண்டகாலமாக தபாலக சேவை திருப்திகரமாகவும், சிறப்பான முறையிலும் கடைத்து வருவது பாராட்டதக்கதாகும்.
மக்களின் அன்றாட தொடர்பாடலில் முக்கிய பங்கு வகிக்கும் தபால் சேவைகளை அர்ப்பணிப்புடனும் சேவை மனப்பாங்குடனும் முன்னெடுத்து வரும் உத்தியோகத்தர்கள், தபால் சேவையாளர்கள், ஊழியர்கள் அனைவரையும் எமது ஊர் மக்கள் சார்பில் பாராட்டுவதுடன் நன்றி பகிரவும் கடமைப்பட்டுள்ளேன். மக்கள் சேவையில் ஈடுபடும் நாம் கடமைகளையும் பொறுப்புக்களையும் உணர்ந்து, எமது கடமைகளின் தாற்பரியங்களைப் புரிந்தும் செயற்படுவோமானால் மக்களின் திருப்திகளையும் நல்லபிமானங்களையும்; வென்றெடுக்க முடியும்.
கடந்த நான்கு வருடகாலமாக இத் தபாலகத்தின் பிரதம தபால் அதிபராகக் கடமையாற்றிய தபாலதிபர் ஏ.எம்.ஏ.றசீத்தின் அளப்பரிய சேவைகள் என்றும் மறக்க முடியாதவையாதகும். தமது சிறந்த நிருவாகத்தினை இக்காலக்கட்டத்தில் அவர் வெளிப்படுத்தியது மட்டுமின்றி பொதுமக்களின் தபாலக தேவைகளை நிறைவு செய்தும் வந்துள்ளார். அவரது கடமை உணர்வுக்கும் சிறந்த சேவைக்கும் எம். மக்கள் சார்பில் மீண்டும் நன்றி கூறுகின்றேன் எனவும் தெரிவித்தார்.