Breaking
Tue. Mar 18th, 2025

அமெரிக்காவில் ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவு அடைய உள்ள நிலையில், அங்கு நவம்பர் மாதம் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்க உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட டோனால்ட் டிரம்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் அமெரிக்காவின் அடுத்த அதிபராகும் வாய்ப்பு டோனால்டு டிரம்ப்புக்கு இல்லை என்று அதிபர் ஒபாமா கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில் “டோனால்டு டிரம்ப் அடுத்த அமெரிக்க அதிபராக வாய்ப்பில்லை என்று தொடர்ந்து நான் நம்புகிறேன். அமெரிக்க மக்கள் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை தான் இதற்குக் காரணம்.

அமெரிக்க அதிபராக இருப்பது என்பது மிகவும் பொறுப்பு மிக்க பணி என்பதை மக்கள் நன்கு அறிந்துள்ளனர். இது டி.வி.-யில் வரும் ரியால்டி ஷோ அல்லது டாக் ஷோ நடத்துவது போன்றது இல்லை. மார்க்கெட்டிங் வேலையும் இல்லை.”  என்று தெரிவித்துள்ளார்.

By

Related Post