நாடளாவிய ரீதியில் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையினால் அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை சில மணிநேரங்களில் மின் வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சு நிராகரித்தது. இதனால் நேற்று மாலை நாட்டு மக்களிடையே குழப்பகரமான நிலை ஏற்பட்டது. மின்வெட்டு அமுலாகுமா அமுலுக்கு வராதா என்ற கேள்விகளுடன் மக்கள் குழப்பத்துடன் காணப்பட்டனர்.
நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டு மின்துண்டிப்பு முன்னெடுக்கப்படும் என நேற்று மாலை இலங்கை மின்சார சபையினால் விஷேட மின் வெட்டு பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டது. இந்த நிலையிலேயே
அந்த பட்டியல் அமுல் செய்யப்படாது என மின் வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்தார்
இது இவ்வாறு இருக்க அமைச்சர் மின் தடை ஏற்படாது என கூறிய போதும் நேற்று மாலையாகும் போதும், கம்பஹா மற்றும் கண்டி பகுதிகளின் பல பகுதிகளிலும் மின் வெட்டு மேற்கொள்ளப்பட்டதாக பொது மக்கள் தெரிவித்தனர்.