Breaking
Wed. Dec 25th, 2024
– இக்பால் அலி  –
மக்காவில் சீரற்ற காலநிலை காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் இலங்கையிலிருந்து சென்ற ஹஜ்ஜாஜிகள் தொடர்பான நிலவரங்களை உடன் பெற்றுத் தருமாறு இலங்கை சவூதி அரேபியாத் தூவராலயத்திலுள்ள உதவித் தூதுவர் அன்சார் அவர்களிடம் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தொலைபேசியில் அவரச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன் போது இருவருக்கிடையே நடைபெற்ற கலந்துரையாடலில் இலங்கையிலிருந்து சென்ற ஹஜ்ஜாஜிகள் தொடர்பான விபரங்களை உடன் பெற்றுத் தருவதற்கு தான் தயராக இருப்பதாகவும் அதற்காக முழு நேர முயற்சிகளுடன் ஈடுபட்டுவருவதாக தெரிவித்த அவர் ஹரமில் மூன்று அடி தண்ணீர் நிற்பதாகவும் தூதுவர்  அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

Related Post