Breaking
Mon. Mar 17th, 2025

-எம்.எம்.அஹமட் அனாம் –

ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியாவிலுள்ள மக்காவுக்குச் சென்ற இலங்கையர் ஒருவர், மாரடைப்புக் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பகுதியைச் சேர்ந்த எஸ்.எல்.ஹயாத்து முஹம்மட் (வயது 67) என்பவர் மார்க்கக் கடமையில் ஈடுபட்டிருந்தபோதே, உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இவர் தனது மனைவியுடன் மக்காவுக்கு கடந்த வாரம் சென்றிருந்தார். இவரது ஜனாஸா நல்லடக்கம் மக்காவில் இடம்பெறவுள்ளதாக உறவினர்கள் கூறினர்.

By

Related Post