வெள்ளிக்கிழமை மக்கா அல் மஸ்ஜிதுல் ஹராமில், தனியார் கொம்பனிக்கு சொந்தமான மாபெரும் கிரேன் விழுந்து ஏற்பட்ட பாரிய விபத்தில் ஈரான், பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா, துருக்கி, எகிப்து, அல்ஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 107 பேர் பலியானதுடன், 238 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டதுடன், விபத்துக்கான காரணம் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு அதிகாரிகளை பணித்ததாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருடன் இணைந்து முடிக்குரிய இளவரசரும், பிரதமரும், உள் துறை அமைச்சருமான நாய்ப் பின் அப்துல் அஸீஸ், இரண்டாம் முடிக்குரிய இளவரசரும் பாதுகாப்பு அமைச்சருமான முஹம்மத் பின் சல்மான் உள்ளிட்ட உயர் மட்ட அரச தலைவர்களும் சென்றிருந்தனர்.
அதே வேளை விபத்தில் காயமடைந்து வைத்திசாலையில் சிக்கிச்சப் பெற்று வரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை சந்தித்த மன்னர் சல்மான் அவர்களுக்கு ஆறுதல் கூறியதாக மேலும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன..