கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் மங்கலகம பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வீட்டத்திட்டத்திற்கு பயணம் செய்யும் பிரதான பாதையில் பாலம் அமைப்பதற்காக முன்னாள் விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களால் 20 இலட்சம் நிதியொதுக்கீடு செய்யப்பட்டது
இதற்கான அடிக்கல் நாடும் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வுக்கு பிரதேச சபை உறுப்பினர் சுனில் பண்டார, நிலைய பொறுப்பதிகாரி பண்டார நிமால், சமன் மங்கலகம விகாரதிபதி மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.