Breaking
Thu. Dec 26th, 2024

அஸ்ரப் ஏ சமத்

சரத்பொண்சேகா மங்கள சமரவீரவுக்கு அரசில் சேரவேண்டாம் என ஆலோசனை வழங்கியதாக நேற்று அனைத்து எதிர்க்கட்சிககளின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார். அதே வைத்தியசாலையில் மங்கள சமரவீரவும் மருத்துவ பரிசோதனை முடித்துவிட்டு நாளை நாடு திரும்புகின்றார். நாடு திரும்பியதும் அரசில் சேருவதாக மங்கள சமரவீர தெரியப்படுத்தியிருந்தார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையே சரத்பொன்சேகா நாடு திரும்புகின்றார். அது மட்டும் நாம் ஒன்று சேர்ந்து பேசுவோம் அவசரப்பட்டு அரசில் சேர வேண்டாம். எனவும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்று அனைத்து எதிர்கட்சி ஊடகமாநாட்டுக்கு வருகைதந்திருந்த ரணில் விக்கிரமசிங்க சிறிது நேரம் சரத்பொன்சேகாவுடன் கீழ் மாடியில் பேசிக்கொண்டு இருந்ததை ஊடகவியலாளர்கள் அவதாணித்தனர்.

மேற்கண்ட தகவலை சரத்பொண்சேகாவுடன் சென்றிருந்த அவரது பிரத்தியோகச் செயலாளர் டொக்டர் சேனக்கா டி சில்வா இணையத்தள ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளர்

Related Post