Breaking
Sat. Jan 11th, 2025

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் நான்கு தடவைகள் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, சிங்கபூருக்கு பயணிப்பதற்கு முன்னர், அவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகிய இருவரும், கொழும்பிலுள்ள மங்களவின் வீட்டில் வைத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இது மங்களவை ஆளும் கட்சிக்குள் இழுப்பதற்கான பேச்சாக தெரிவிகக்ப்பட்டுள்ள போதிலும், மங்கள இன்னும் ஐக்கியத் தேசியக் கட்சியை விட்டு விலக வேண்டும் என உத்தேசிக்கவில்லை என அவரது நெருங்கிய வட்‌டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கரு ஜயசூரியவை பொது வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி அறிவிக்கும் பட்சத்தில், அதற்கு மங்களவும் முழு ஆதரவை வழங்குவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Post