Breaking
Tue. Jan 7th, 2025

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் ஏ.ஆர்.எம்.தாரிக்கின் வேண்டுகோளுக்கிணங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இஷாக் ரஹுமானினால் கெக்கிராவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட மடாட்டுகமையில் நேற்று 2018.09.20 புதிய லங்கா சதொச நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவரும், அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுமான், பாராளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே, மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரான ஏ.ஆர்.எம்.தாரிக்  மற்றும் கெக்கிராவ, இப்பலோகம, திறப்பனை, பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

(ன)

 

Related Post