Breaking
Sun. Nov 24th, 2024

மட்­டக்­க­ளப்பு – வந்­தா­று­மூலை பகு­தியில் அமைந்­துள்ள தங்­களின் கடை­க­ளுக்கு காப்­பு­றுதிப் பணத்­தினை பெறு­வ­தற்­காக திரு­டர்கள் கடை­களை உடைத்து கொள்­ளை­யிட்ட மாதிரி கடை உரி­மை­யா­ளர்­களே தங்­களின் கடை­களை உடைத்து கொள்­ளை­யிட்ட சம்­பவம் இடம்பெற்றுள்ளமை தெரி­ய
வந்­த­தை­ய­டுத்து கடை உரி­மை­யா­ளர்கள் பொலி­ஸா­ரிடம் வகை­யாக மாட்டிக் கொண்­டுள்­ளனர்.

இதனால் ஏறாவூர் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட வந்­தா­று­மூலை பிர­தான வீதி­யி­லுள்ள இரண்டு கடைகள் உடைக்­கப்­பட்டு கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்ள சம்­ப­வங்கள் முற்­றிலும் பொய்­யா­னது என்றும் ஏறாவூர் பொலிஸார் தெரி­வித்­தனர்.

வந்­தா­று­மூ­லையில் உள்ள இரண்டு கடை­களே இவ்­வாறு உடைக்­கப்­பட்டு கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இது தொடர்பில் பொலிஸார் உட­ன­டி­யாக விசா­ர­ணை­களை மேற்­கொண்ட போது குறித்த கடை உரி­மை­யா­ளர்கள் தங்­களின் கடை­க­ளுக்­கான காப்­பு­றுதி பணத்­தினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு திரு­டர்கள் கடை­களை உடைத்து கொள்­ளை­யி­டப்­பட்­டது போன்று பொய்­யான தக­வலை வழங்கி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ள விடயம் தெரி­ய­வந்­துள்­ளது.
இது தொடர்பில் பொய்­யான தக­வல்­களை வழங்­கிய குற்றச்சாட்டின் பேரில் கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Post