Breaking
Mon. Dec 23rd, 2024

அப்துல்லாஹ்

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் மட்டக்களப்பில் மின்வெட்டு புதன்கிழமை தொடக்கம் ஐந்து தினங்களுக்கு மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று மட்டக்களப்பு பிரதேச மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

தினமும் காலை ஒன்பது மணி தொடக்கம் மாலை ஐந்து வரை இந்த மின்வெட்டு பின்வரும் மின் பாவினையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் அமுலில் இருக்கும்.

புதன்கிழமை 09.07.2015– களுவாஞ்சிகுடி மின் பாவினையாளர் சேவை நிலைய அம்பிளாந்துறைப் பகுதி.

வியாழக்கிழமை 10.07.2015- களுவாஞ்சிகுடி நகர மின் பாவினையாளர் சேவை நிலைய குறுமண்வெளிப் பகுதி,

வெள்ளிக்கிழமை 11.07.2015 காலை 8.30 தொடக்கம்- ஏறாவூர் மின் பாவினையாளர் சேவை நிலைய ஆறுமுகத்தான் குடியிருப்பு, களுவன்கேணிப் பகுதிகள்.

சனிக்கிழமை 12.07.2015- மட்டக்களப்பு நகர மின் பாவினையாளர் சேவை நிலைய இருதயபுரம், சின்ன ஊறணிப் பகுதிகள்.

ஞாயிற்றுக்கிழமை 13.07.2015- களுவாஞ்சிகுடி மின் பாவினையாளர் சேவை நிலைய– பெரியபோரதீவு, முனைத்தீவு, பழுகாமம் பகுதிகள்.

Related Post