Breaking
Mon. Dec 23rd, 2024

இந்த வரு­டத்தின் ஜன­வரி முதலாம் திகதி முதல் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 78 பேர் டெங்கு நோய்த் தாக்­கத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக மாவட்ட பிராந்­திய சுகா­தாரப் பணிப்­பாளர் டாக்டர் ஏ.எல்.எம்.ரஹ்மான் தெரி­வித்தார்.

இதே­வேளை, இந்த வரு­டத்தில் நுளம்­புப்­பெ­ருக்­கத்­துக்கு ஏது­வாக சூழலை வைத்­தி­ருந்த 30 பேருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­ய­வந்­துள்­ளது.

இந்த மாவட்­டத்தில் டெங்கு நோய்த் தாக்­கத்தைக் குறைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில், நாளொன்­றுக்கு 100 வீட்டு வளா­கங்­களில் சோதனை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. வீட்­டுப்­பீ­லிகள், கிண­றுகள் உள்­ளிட்­ட­வற்றில் நுளம்­புப்­பெ­ருக்கம் காணப்­ப­டு­கின்­றது. அத்­துடன், விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­களும் வழங்­கப்­ப­டு­கின்­றன.

இருப்­பினும், விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­களை சிலர் பின்­பற்­றாத நிலைமை உள்­ளது. மேலும், நகர்ப்­ப­கு­தி­க­ளி­லுள்ள சில வீடுகள் பூட்­டப்­பட்­டுள்­ள­மை­யினால், அவற்றில் சோதனை மேற்­கொள்ள முடி­யாத நிலைமை உள்­ள­துடன், நுளம்­புப்­பெ­ருக்­கத்தை கட்­டுப்­ப­டுத்த முடி­யாத நிலை­மையும் உள்­ளது.

கடந்த காலத்தில் நுளம்­புப்­பெ­ருக்­கத்தை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக கிண­று­களில் மீன்­ குஞ்­சு­களை விடும் நட­வ­டிக்­கையை சுகா­தாரத் திணைக்­களம் மேற்­கொண்­டி­ருந்­தது. இந்த நடவடிக்கையை சுகாதாரத் திணைக்களத்தினால் மட்டும் செய்ய முடியாது. பொதுமக்கள், உள்ளூராட்சி சபைகள் இணைந்து மேற்கொள்ள வேண்டு மெனவும் அவர் கூறினார்.

By

Related Post