Breaking
Mon. Dec 23rd, 2024
மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இன்று மாலை (07) மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, ஏறாவூர் மற்றும் காத்தான்குடி ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்து ஆதரவாளர்கள், முக்கியஸ்தர்கள் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார்.
 
 
மக்கள் காங்கிரஸ் தவிசாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அமீர் அலியின் தலைமையில் குறித்த மக்கள் சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
 
ஆறு மாத கால அநியாய சிறைப்படுத்தலின் பின்னர், தமது பிரதேசத்துக்கு வருகை தந்த தலைவர் ரிஷாட் பதியுதீனை மக்கள் அன்புடன் வரவேற்று நலம் விசாரித்தனர்.
 
இதேவேளை, தனது விடுதலைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
 
 
 
 
 
 
 
 

Related Post