Breaking
Sun. Nov 17th, 2024

சர்வதேச ரீதியில் சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கணித வினா விடைப் போட்டியில் மட்டக்களப்பு மத்தி வலயத்துக்கு வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற மாணவர்களை பாராட்டுவதில் பெருமிதம் கொள்வதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

சர்வதேச ரீதியில் சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கணித வினா விடைப் போட்டியில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில் –

சர்வதேச ரீதியில் சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கணித வினா விடைப் போட்டியில் மட்டக்களப்பு மத்தி வலயத்துக்கு உட்பட்ட காத்தான்குடி ஹிலுரியா வித்தியாலய மாணவன் செல்வன்.எம்.எஸ்.ஏ.மாலிக் சர்வதேச ரீதியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தை பெற்றுள்ளார்.

அத்தோடு வாழைச்சேனை ஆயிஷா பாலிகாவைச் சேர்ந்த மாணவி செல்வி.எஸ்.சியாமா சுஹா, ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி மாணவன் செல்வன்.எம்.எம்.மதீன், காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் செல்வன்.கே.எச்.எம்.அன்பஸ் ஆகியோர் சர்வதேச ரீதியில் மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.

எனவே பாடசாலைக்கும், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கும், எமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்நத மாணவச் செல்வங்களை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்வதுடன், இவர்களை ஊக்குவித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இவர்களது பெற்றோர்கள் ஆகியோருக்கும் இச் சந்தர்ப்பத்தில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Post