Breaking
Tue. Mar 18th, 2025
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் அவர்களினால் இறைவணக்கத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது .
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று 27.03.2017 ஆம் திகதி  மட்டக்களப்பு மாவட்ட மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க   இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற  உறுப்பினர் ஶ்ரீநேசன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மாவட்ட டெங்கு நெளம்பு பரவுவதை தடுப்பது தொடர்பாக பிரதேச சபை செயலாளர்கள் இதற்கு பாரிய பங்களிப்புக்களை செய்யவேண்டும் அதன் மூலம் எமது மாவட்டத்தை பாதுகாத்து கொள்ள முடியும்.
அதபோன்று மக்கள் மத்தியில் இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களான அலிசாஹிர், யோகஸ்வரன் , மாகாண சபை விவசாய அமைச்சர் துறைராச்சிங்கம், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.FB_IMG_1490591070592 FB_IMG_1490591067545

Related Post