பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் மனிதப்புதைகுழி தோண்டப்பட வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கினால் தாக்கல் செய்யப்பட வழக்கின் தொடர்ச்சியான வழக்கு விசாரணை கடந்த ஜனவரி மாதம் 29ம் திகதி களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஏற்கனவே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கினால் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தினை பூமிக்கு கீழேயுள்ள எச்சங்களை கண்டறிய ஸ்கேன் கருவியினூடாக குறிப்பிட்ட அந்த பகுதியினை ஆய்வு செய்யுமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதி மன்ற நீதவான் ரியால் கட்டளை பிறப்பித்தார்.
இதனடிப்படையில் 30.03.2015 அதாவது நேற்று திங்கட்கிழமை மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சாட்சியமளித்த பொலிசார் குறிப்பிட்ட அடையாளப்படுத்தப்பட்ட பகுதியானது ஆய்வுக்கு உற்படுத்தப்பட்டதாகவும் மனித எச்சங்கள் என நம்பப்படும் 4 ½ மீட்டர் X 4 ½ மீட்டர் அளவிலான இடம் அடையாளப்படுத்தப்பட்டு அதற்குறிய அறிக்கை வரும்வரை காத்திருப்பதாக பொலிசார் கூறினர்.இதனைத் தொடர்ந்து களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதி மன்ற நீதவான் ரியால் மிக விரைவாக இந்த புதை குழியினை தோண்டுவதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு கட்டளை பிறப்பித்தார்.