ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
புதிய காத்தான்குடி, ஏத்துக்கால்,பூநொச்சிமுனை, பாலமுனை, நாவலடி, பாலமீன்மடு உட்பட பல இடங்களில் கடற்றொழில் நடவடிக்கைகள் முற்றாக செயலிழந்துள்ளன.
இதனால் கடல் மீன்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கடற்றொழிலாளர்கள் தமதுபடகுகளையும் வள்ளங்களையும் கரையிலிருந்து நீண்ட தூரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இடம்மாவட்டத்தில் சுமார் 26 ஆயிரம் குடும்பங்கள் கடற்றொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இம்மாவட்டத்தில் நேற்றிரவு முதல் கடும் மழை பெய்துள்ளது.24 மணிநேரத்தில் 19.2மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.