கொஸ்லாந்தை – மீறியபெத்தை தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா உதவ முன்வந்துள்ளது.
மண்சரிவு அனர்த்தம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு தகவல் அறிந்துள்ளதோடு உதவி அறிவிப்பையும் விடுத்துள்ளார்.
இந்தநிலையில் இன்று பெரும்பாலும் இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விஜயம் மேற்கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்ப்படுகிறது.