ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பண்டாரவளை கல்வி வலயத்துக்குட்பட்ட 10 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ( 03) வரை மூடப்படும்.
தற்போது இடம்பெற்றுள்ள மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காகவே பாடசாலைகள் மூடப்படுமென பண்டாரவளை வலய கல்வி பணிப்பாளர் அரியதாஸ ரட்ணநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவினால் வழங்கப்பட்ட பணிப்புரையின் கீழ் ப+ நாகல பாடசாலைகள், மீறியாபெரா வித்தியாலயம், ஆனோல்ட் வித்தியாலயம், நகேடிய வித்தியாலயம், சிறி கணேச வித்தியாலயம், மாகலெதெனிய வித்தியாலயம், ப+நாகல சிங்கள வித்தியாலயம் மாகந்த வித்தியாலங்கள் தொடர்ந்து மூடப்படவுள்ளன.