கொஸ்லாந்த மீரியபெத்தயில் மண்சரிவு ஏற்பட பிரதான காரணம் அங்கு வசித்த மக்கள் அப்பகுதியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் மரக்கறி உற்பத்தி செய்தமையே என ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.
இற்றைக்கு எட்டு வருடங்களுக்கு முன்னர் இப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டிய ஓரிடம் என எல்லையிடப்பட்டு தூண்களும் நடப்பட்டு இலக்கமிடப்பட்டதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட பேராதனை பல்கலைக்கழக புவியியல் விஞ்ஞானப் பேராசிரியர் கபில தஹநாயக்கா, மேல் நீர்பரப்பு பாதுகாப்பு திட்ட முன்னாள் பணிப்பாளரும் சுற்றாடல் ஆய்வாளருமான டி. ரீ. முனவீர ஆகியோர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இப்பகுதியில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட கூடாதென எட்டு வருடங்களுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகத்துக்கும் அறிவிக்கப் பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இவ்விடயமாக அதிகாரிகளும், தோட்ட மக்களும் கவனம் செலுத்தவில்லை இப்பகுதியில் மரக்கறி உற்பத்தி வியாபித்து உள்ளதாகவும் முனவீர தெரிவித்தார்.