– பழுலுல்லாஹ் பர்ஹான் –
எமது இலங்கை நாட்டில் மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கில் சர்வோதய நிறுவனத்தில் சாந்திசேனா அமைப்பு நடைமுறைப்படுத்தி வரும் மதங்களுக்கிடையிலான ஐக்கிய ஒன்றிணைவு நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான இரண்டாவது ஒன்று கூடல் இம்மாதம் 03 மற்றும் 04ம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்துருக்கொண்டானில் அமைந்துள்ள சர்வோதய வளாகத்தில் நடைபெற்றது.
சர்வோதய நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல்.ஏ. கரீம் தலைமையின் கீழ் இடம்பெற்ற இந் நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கிறிஸ்தவ, பௌத்த, இந்து மற்றும் இஸ்லாமிய மதகுருமார்களும் ,சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசனும் ,சர்வோதய நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரவீந்திர கந்தகே, கிழக்குப் பல்கலைக்கழக விவசாயப் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் பிறேமகுமார், முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா மற்றும் அரச அதிகாரிகள், புத்திஜீவிகள், சமூக சேவையாளர்கள், சாந்திசேனா அமைப்பின் பல மாவட்டங்களைச் சேர்ந்த அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்ச்சித் திட்டத்தில் முக்கிய அம்சமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வரலாற்றுப் புகழ் மிக்க சமயஸ்தலங்கள் பார்வையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.