Breaking
Mon. Dec 23rd, 2024
மதத் தலைவர்களை இழிவுபடுத்துவதற்கு நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை பயன்படுத்த இடமளிக்காத வகையிலான புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இது தொடர்பிலான உத்தேச சட்ட வரைவு பௌத்த சாசன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால், சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நேற்று (5) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றின் விசேட வரப்பிராதங்களை பயன்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தவொரு மதத் தலைவர்களையும் இழிவுபடுத்த அவமரியாதை செய்ய இடமளிக்கக் கூடாது என நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் நாடாளுமன்றில் உரையாற்றுகையில்…

கடந்த காலங்களில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வரப்பிரசாதங்களைப் பயன்படுத்தி மதத் தலைவர்களை இழிவுபடுத்தியிருந்தனர். இந்த நிலைமை தொடர்ந்தும் நீடிக்க இடமளிக்கக் கூடாது.

எனவே இந்த விடயங்களை கருத்திற் கொண்டு புதிய சட்டமொன்று உருவாக்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

By

Related Post