Breaking
Tue. Mar 18th, 2025

மதவாச்சி – நாவற்குளம் பிரதேசத்தில் இரண்டு பஸ் வண்டிகள் இன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி மற்றும் விமானப் படையினரின் பஸ் வண்டி என்பன வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியில் இடம்கொடுக்கும் போது, மழை காலநிலை காரணமாக, குறித்த வீதி வழுக்கியதில் இந்த இரண்டு பஸ்களும் வீதியை விட்டு விலகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By

Related Post