எம்.ரீ.எம்.பாரிஸ்
மதிப்புக்குறியவர்களை வாழ்த்திப் பாராட்டிக்கௌரவிக்கும் விஷேட வைபவம் மட்டக்களப்பு மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.
எமக்கு ‘பாடம் சொல்லித்தரும் ஆசான்களை வாழ்த்துவோம்’ எனும் தொனிப்பொருளுக்கமைவாக இடம் பெற்ற ஆசிரியர் தின விழாவின் பிரதம அதிதியாக பாடசாலையின் அதிபர் ஏ.எம்.அன்வர் அவர்கள் கலந்து கொண்டார்.
இதன் போது மாணவர்களினால் ஆசிரியர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
ஆசிரியர்களின் நகைச்சுவைமிக்க கலை நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
எம்.ரீ.எம்.பாரிஸ்