Breaking
Fri. Nov 15th, 2024
தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வா­ச­லுக்­கென்று நகர அபி­வி­ருத்தி சபை ஒதுக்­கி­யுள்ள காணியை தவிர்த்து அதற்­கப்­பா­லுள்ள முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை 1982 ஆம் ஆண்டு சுவீ­க­ரித்துக் கொண்ட காணியைப் பெற்றுத் தரு­மாறு தம்­புள்ள பள்­ளி­வாசல் நிர்­வாகம் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீ­மி­டமும் அரச தொழில் முயற்சி அபி­வி­ருத்தி அமைச்சர் கபீர் ஹாஷி­மி­டமும் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.
தம்­புள்ள பள்­ளி­வா­சலை தற்­போ­துள்ள காணி­யி­லி­ருந்து அகற்றிக் கொள்­வ­தற்­காக நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை மது­பா­ன­சா­லைக்கு எதிரே காணி­யொன்­றினை ஒதுக்­கி­யுள்­ள­தை­ய­டுத்தே பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் இவ்­வேண்­டு­கோளை இரு அமைச்­சர்­க­ளி­டமும் விடுத்­துள்­ளனர்.
தம்­புள்ள ஹைரியா பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பினர் எஸ்.வை.எம்.சலீம்தீன் இது தொடர்பில் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கையில், நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை 1982 ஆம் ஆண்டு தம்­புள்­ளையில் முஸ்­லிம்­களின் காணி 6 ஏக்­கரைச் சுவீ­க­ரித்­தது. இக்­காணி வெற்­றுக்­கா­ணி­யா­கவே இருக்­கி­றது.
தற்­போது பள்­ளி­வா­ச­லுக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள காணி மது­பா­ன­சா­லைக்கு எதிரே அமைந்­துள்­ளதால் பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­துக்கு அகற்­றிக்­கொள்ள முடி­யாது.
தற்­போது பள்­ளி­வா­சலைச் சூழ வாழும் தமிழ், முஸ்லிம், சிங்­களக் குடும்­பங்­க­ளுக்கும் குறிப்­பிட்ட 6 ஏக்­கரில் தலா 20 பர்ச் வீதம் வழங்­கப்­பட வேண்­டு­மெ­னவும் அகற்­றப்­பட்ட இந்து கோயி­லுக்கும் காணி வழங்­கப்­பட வேண்­டு­மெ­னவும் அமைச்­சர்­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்ளோம்.
இதே­வேளை புதிய காணியில் அர­சாங்கம் பள்­ளி­வா­சலை நிர்­மா­ணித்­துத்­தர வேண்டுமெனவும் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

By

Related Post