Breaking
Fri. Nov 22nd, 2024

தமிழக சட்டமன்றத்தில் மதுவிலக்கு தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளேன். இதற்காக முதல்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. கடைகளின் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கை உண்மையாக அமல்படுத்துவதில் அ.தி.மு.க. தான் அதிக அக்கறை கொண்டுள்ளது.

1971-ல் பூரண மதுவிலக்கு அமலில் இருந்தபோது அப்போதைய முதல்வர் கருணாநிதி மதுவிலக்கை தளர்த்தினார். 2007-ல் அவர் முதல்வராக இருந்தபோது, கள்ளச்சாராயத்தை அறவே ஒழிக்க முடியாது என்றார்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வரின் பேச்சுக்கு பதில் தர அனுமதி அளிக்கும்படி தி.மு.க. உறுப்பினர் சபாநாயகரிடம் கேட்டனர். ஆனால், சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இதனால், தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து தொடர்ந்து பேசிய ஜெயலலிதா, ‘கச்சத்தீவு மற்றும் பூரண மதுவிலக்கு பற்றி பேசினாலே எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்கின்றன’ என குற்றம்சாட்டினார்.

By

Related Post